SBI வங்கியில் 1,226 பேருக்கு வேலைவாய்ப்பு – வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!

0
SBI வங்கியில் 1,226 பேருக்கு வேலைவாய்ப்பு - வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!
SBI வங்கியில் 1,226 பேருக்கு வேலைவாய்ப்பு - வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!
SBI வங்கியில் 1,226 பேருக்கு வேலைவாய்ப்பு – வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவல் ஓய்ந்துவந்ததையடுத்து பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் வேலைவாய்ப்பு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரி பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த பணியில் மொத்தம் 1,226 காலியிடங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், சென்னை சர்க்கிளில் மட்டும் 276 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

டிசம்பர் 15 முதல் 1 – 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

மீதமிருக்கும் காலியிடங்கள் அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் SBI வங்கிகளில் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இப்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் வணிக வங்கி அல்லது கிராமப்புற வங்கிகளில் 2 ஆண்டுகள் வரை வங்கி அதிகாரியாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் பெயர், முகவரி, மொபைல் எண் மொழி மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மேலும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, 1.12.2021ம் தேதிக்குள் 30 வயது பூர்த்தியடைந்தவராகவோ, அதற்கு குறைவான வயதுடயவராகவோ இருக்க வேண்டும். இதில் வயது தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்றபடி உள்ளுர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி டிச.29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்களை SBI வங்கியின் https://sbi.co.in/web/careers மூலம் தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here