தமிழக 12ம் வகுப்பு மாணவர்களே இந்த புது ரூல்ஸ் தெரியுமா? – பொதுத்தேர்வுக்கு ‘இது’ ரொம்ப முக்கியம்!
2023 – 24ம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான விதிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் இறுதி தேர்வுகள் மூலம் மாணவர்கள் மதிப்பிடப்பட்டு அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அடைகிறார்கள். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மாணவர்களின் எதிர்கால வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் அடிப்படை தளமாக விளங்கி வருகிறது. 2023 ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவிற்கு பிறகு கல்வி இடைநிற்றல் காரணமாக அதிக அளவிலான மாணவர்கள் கல்வியை தொடரவில்லை. இதன் காரணமாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு துணை தேர்வுக்கு போதிய ஏற்பாடுகளை செய்து மாணவர்களை தேர்வு எழுத தூண்டியது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை – வானிலை மையம் தகவல்!
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் நடப்பு கல்வி ஆண்டு போதிய வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொது தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடந்த கல்வி ஆண்டின் எமிஸ் வருகை பதிவை கொண்டு இந்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.