டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை - RBI பட்டியல் வெளியீடு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை - RBI பட்டியல் வெளியீடு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்த டிசம்பர் மாதத்திற்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பொது விடுமுறை அல்ல, மாநில வாரியாக அறிவிக்கப்படும் விடுமுறை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

டிசம்பர் மாத விடுமுறை நாட்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் விடுமுறை பட்டியலை பற்றி அறிவிப்பை வெளியிடும். அதனை தொடர்ந்த 2021-ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை இந்த ஆண்டின் தொடக்கத்திலே வெளியிட்டது. RBI விடுமுறைப் பட்டியலை மாநில வாரியாக விடுமுறைகள், மத விடுமுறைகள் மற்றும் பண்டிகைகள் என மூன்று வெவ்வேறு வகைகளாக பிரித்து அறிவிப்பை வெளியிடும். இதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் டிசம்பர் மாதத்தில் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் வரை செயல்படாது என்று பட்டியலிட்டுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் நாளை வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வெதர்மேன் அறிக்கை!

இதனை தொடர்ந்து, இந்த 12 விடுமுறை நாட்கள் மாநில வாரியாக இருப்பதால் இந்த விடுமுறை பொதுவிடுமுறை அல்ல என்பதையும், இது ஒவ்வொரு மாநிலத்தை சார்ந்த உள்ளூர் விடுமுறை ஆகும். மேலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில வங்கிக் கிளைகள் மட்டுமே மேலே குறிப்பிட்ட நாட்களில் மூடப்பட்டிருக்கும். அதாவது வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி கோவாவில் புனித பிரான்சிஸ் சவேரியார் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் வங்கி சேவைகள் இருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு 20% வரை சம்பள உயர்வு – மாநில அரசு முடிவு!

ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ‘பேச்சுவார்த்தைக்குரிய கருவிச் சட்டத்தின் கீழ் விடுமுறை’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் இந்த மாதத்திற்கான முதல் விடுமுறை டிசம்பர் 3 அன்று அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று கோவையில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை. மற்ற அனைத்து வங்கிகளும் செயல்படும். இவ்வாறு பல்வேறு மாநில வாரியான விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர சில வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த வார இறுதி விடுமுறை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். தற்போது டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை விவரங்களை பற்றி கீழே காண்போம்.

  • டிசம்பர் 3 – புனித பிரான்சிஸ் சேவியரின் விழா – கோவாவில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • டிசம்பர் 5 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 11 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 18 – U SoSo Thamன் இறந்த நாள் – ஷில்லாங்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை (பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை).
  • டிசம்பர் 19 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ் விழா – ஐஸ்வால், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 25 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 26 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஐஸ்வால் பகுதியில் மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 30 – யு கியாங் நங்பா – ஷில்லாங்கில் மட்டும் விடுமுறை.
  • டிசம்பர் 31 – புத்தாண்டு ஈவ் – ஐஸ்வால் பகுதியில் மட்டும் விடுமுறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!