TNPSC அலுவலகத்தில் 11 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசி நாள்!

4
TNPSC அலுவலகத்தில் 11 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசி நாள்!
TNPSC அலுவலகத்தில் 11 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசி நாள்!
TNPSC அலுவலகத்தில் 11 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசி நாள்!

TNPSC அலுவலகத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC காலிப்பணியிடம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, TNPSC அலுவலகத்தில் காலியாக உள்ள 11 இயக்குநர் காலிப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வின் அடிப்படையில் தான் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், நவம்பர் 5 ஆம் தேதி இயக்குநர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து, வயது வரம்பு முன்பதிவு செய்யப்படாத பிரிவினருக்கு 32 எனவும், SC, ST, MBCs, OBCMs, BC( முஸ்லீம்கள்) மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வீட்டு அறிவியல், உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் ஆகியவற்றில் ஏதோவொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய உத்தரவு – அறிவிப்பு வெளியீடு!

மேலும், தகுதியும் விரும்பமும் பெற்ற விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விண்ணப்பதாரர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்ய ஆகஸ்ட் 21 முதல் 23 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!