தமிழகத்தில் போலீஸ் வேலைக்கு 11,812 பேர் தேர்வு – TNUSRB அறிவிப்பு!

0
தமிழகத்தில் போலீஸ் வேலைக்கு 11,812 பேர் தேர்வு - TNUSRB அறிவிப்பு!
தமிழகத்தில் போலீஸ் வேலைக்கு 11,812 பேர் தேர்வு - TNUSRB அறிவிப்பு!
தமிழகத்தில் போலீஸ் வேலைக்கு 11,812 பேர் தேர்வு – TNUSRB அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 11 ஆயிரத்து 812 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலர் போன்ற பணிகளுக்கு 11 ஆயிரத்து 813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்கு சுமார் 6 லட்சம் விண்ணப்பித்தனர். அதன் பின் அதில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 5.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது – அரசுக்கு கண்டனம்!

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 20 மையங்களில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இத்தேர்வின் இறுதியாக 3,845 பேர் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மற்றும் 6,545 பேர் சிறப்பு காவல் படைக்கும், 129 பேர் சிறைத்துறைக்கும், 1,293 பேர் தீயணைப்பு துறைக்கும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இத்தேர்வில் மொத்தமாக 3065 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மூவர் உட்பட 11 ஆயிரத்து, 812 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

இத்தேர்வில் 11 ஆயிரத்து 813 பேரை தேர்வு செய்வதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் 11 ஆயிரத்து 812 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமிருக்கும் ஒரு பணியிடம் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது. மேலும் இவர்களுக்கு பணி ஆணை வழங்கும் முன், மருத்துவ பரிசோதனை மற்றும் முந்தைய பழக்க வழக்கங்கள் குறித்த காவல் விசாரணை, அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் உதவியுடன் நடத்தப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தேர்வில் தேர்வானோர் பட்டியல் பெற www.tnusrbonline.org என்ற சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளத்தை அணுக வேண்டும் .

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here