IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 அணியில் 7 இந்திய வீரர்கள்!

0
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உத்தேச 11 அணியில் 7 இந்திய வீரர்கள்!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உத்தேச 11 அணியில் 7 இந்திய வீரர்கள்!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 அணியில் 7 இந்திய வீரர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின், முதல் தேர்வில் இடம்பிடிக்கும் 7 இந்திய வீரர்களின் விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ்

IPL போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் அணியான மும்பை இந்தியன்ஸ் (MI), 15வது சீசனில் பல புதிய மாற்றங்களுடன் களம் இறங்க இருக்கிறது. இதற்காக 2022 மெகா ஏலத்தில் 21 புதிய வீரர்களை, 489 கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் (15.25 கோடி) அதிக விலையில் ஏலம் போனார் . இவர்தான் IPL 2022 ஏலத்தின் மிகவும் விலையுயர்ந்த வீரராகவும் இருந்தார்.

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!

இதற்கிடையில் ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, போல்ட் உள்ளிட்ட சிறந்த வீரர்களை MI அணி இழந்திருந்தாலும் முருகன் அஸ்வின், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ் மற்றும் டிம் டேவிட் ஆகிய நட்சத்திர வீரர்களை இந்த அணி பெற்றுள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அந்த வகையில் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி தனது 5வது பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

இதனை தொடர்ந்து 2022 IPL சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா (ரூ.16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (ரூ.12 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ. 8 கோடி), கீரன் பொல்லார்டு (ரூ.6 கோடி) ஆகிய முன்னணி வீரர்களை தக்கவைத்து கொண்டது. இப்போது இந்த அணி வலுவான பிளேயிங் XI ஐ உருவாக்க வேண்டும். அந்த வகையில் பிளேயிங் XI அணியில் இடம்பிடிக்கும் முக்கிய 7 இந்திய வீரர்களின் விவரங்களை விரிவாக காண்போம். அந்த வகையில், வழக்கம் போல மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் வழிநடத்துவதுடன், பேட்டிங்கையும் தொடங்குவார்.

இவரை தொடர்ந்து இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 2 மற்றும் 3 வது இடத்தையும் வகிக்கலாம். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக MI அணியின் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக உள்ளனர். SKY தனது புதுமையான பேட்டிங் முறைகள் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும். வரவிருக்கும் சீசனிலும் அவர் தனது ஃபார்மை தொடர விரும்புவார் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக நல்ல லெக் ஸ்பின்னரை தவறவிட்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முருகன் அஸ்வின் சிறந்த தேர்வாக அமைந்துள்ளார்.

இவர் இளமையாக இருப்பதால், நிர்வாகத்தாலும் கேப்டனாலும் சீர்படுத்தப்படக்கூடியவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. உனத்கட் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மூத்த வீரர்களில் ஒருவர். இப்போது MI அணியில் டிரென்ட் போல்ட் இல்லாததால் உனத்கட் மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவை சேர்ந்த பாசில் தம்பி, ஜஸ்பிரித் பும்ராவுடன் ஒரு நல்ல ஜோடியை உருவாக்க முடியும். தவிர விளையாடும் XIல் இவருக்கு நிலையான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான தம்பி, இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எப்போதும் போல, மும்பை இந்தியன்ஸ் ப்ளேயிங் லெவன் அணியில் ஜஸ்பிரித் பும்ரா உறுதியாக இருக்கிறார். இந்திய அணியின் நம்பிக்கைக்கு உரிய சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் பும்ராவின் சாதனை உலகம் அறிந்ததே. இப்போது அவர் MI அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருப்பார் என்பது அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரிய நம்பிக்கை அளிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!