11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் நகல் வெளியீடு!
தமிழகத்தில் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
விடைத்தாள் நகல்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மே மாதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று 11ம் பொதுத்தேர்வில் விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன்.12 பள்ளிகள் திறப்பு – அடுத்தடுத்து என்ன முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
மேலும் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்குரிய படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நாளை முதல் ஜூன் 10ம் தேதி வரை மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதனை வைத்து மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.