தமிழகத்தில் 10 ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

0
தமிழகத்தில் 10 ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் 10 ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் 10 ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வந்தது. இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெறவில்லை. மேலும், ஆண்டு இறுதி தேர்வான பொதுத்தேர்வுகளும் கூட நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமான உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர்.

இதனால் கொரோனா பரவல் குறைந்த தற்போதைய நிலையில், தான் நடப்பு கல்வி ஆண்டான 2022-2023 வழக்கம் போல் சரியான நேரத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து செயல்முறைகளும் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்தது போல், நடந்து வருகிறது. மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசின் முயற்சிகள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் 3000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்? அமைச்சர் விளக்கம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தற்போது 10-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகளுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை தேர்வு நடக்க இருக்கிறது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்பு அக்டோபர் 6- ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here