10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – எப்படி சரிபார்ப்பது? முழு விவரங்கள் இதோ!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்படி சரிபார்ப்பது? முழு விவரங்கள் இதோ!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்படி சரிபார்ப்பது? முழு விவரங்கள் இதோ!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – எப்படி சரிபார்ப்பது? முழு விவரங்கள் இதோ!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எஸ்எஸ்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் ஓய்ந்து வந்ததையடுத்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கமான முறையில் மீண்டுமாக செயல்படத் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பொதுத்தேர்வுகளையும் அரசு இந்த ஆண்டு நேரடி முறையில் நடத்தி இருந்தது. இதற்கிடையில் தேர்வுகள் முடிவடைந்ததும் மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறைகளையும் அரசு அறிவித்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை அரசு வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் இன்று (ஜூன் 17) வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை மாணவர்கள் maharashtraeducation.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநில எஸ்எஸ்சி தேர்வுகளில் பங்கேற்ற 96.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இது தவிர பொதுத்தேர்வு எழுதிய 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் 112 மாணவர்கள் காப்பியடித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஒரு போலியான மாணவர் ஒருவர் மாநில வாரியத் தேர்வில் பங்கேற்றிருக்கிறார். இதனுடன் 79 மாணவர்கள் முறைகேடுகளை செய்து பிடிபட்டுள்ளனர். இந்த வழக்குகளை மாநில கல்வி வாரியம் தற்போது விசாரித்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இன்று வெளியாகி இருக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டிஜிலாக்கர் மூலம் தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

தேர்வு முடிவுகளை ஆன்லைனில் சரிபார்க்க:
 • முதலில் மகாராஷ்டிரா வாரிய இணையதளத்திற்குச் செல்லவும்
 • அதில் MSBSHSE SSC முடிவு 2022 இணைப்பைக் கிளிக் செய்யவும்
 • ரோல் எண்ணை உள்ளிடவும்
 • இப்போது தேர்வு முடிவு தோன்றும்.

5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம் – நிர்வாகத்தின் அசத்தல் அறிவிப்பு! மகிழ்ச்சியில் மக்கள்!

டிஜிலாக்கர் மூலம் முடிவுகளை காண:
 • முதலில் digilocker.gov.in. என்ற இணைப்பை திறக்கவும். அல்லது ஸ்மார்ட்போனில் DigiLocker செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
 • பின்னர், அந்த பக்கத்தின் மேல் இடது மூலையில் உள்ள பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.
 • உங்கள் ஆதார் அட்டையின் பெயர், பிறந்த தேதி, வகை, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் மற்றும் ஆறு இலக்க பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.
 • இப்போது, ‘கல்வி’ வகையின் கீழ், MSBSHSE என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 • மகாராஷ்டிரா SSC தேர்வு முடிவு 2022 வகையைத் தேர்வு செய்யவும்
 • உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.
 • இப்போது தேர்வு முடிவு உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here