10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு பதற்றம் – அரசிடம் கோரிக்கை!

0

10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு பதற்றம் – அரசிடம் கோரிக்கை!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் நலனிற்காக புதிய உத்தரவு ஒன்றை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

புதிய உத்தரவு

இந்தியாவில் சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வாங்கும் மதிப்பெண் தான் எதிர்கால படிப்பிற்கும், வேலைவாய்ப்பிற்கும் உதவியாக இருக்கும். அதனால் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் கர்நாடகா மாநில அரசிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவிற்கு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள் மேலாண்மை சங்கங்கள் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றனர். அதாவது பொதுத்தேர்வு மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியாக அழுத்தம் கொடுக்கிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என வாரந்தோறும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் தங்களை திருத்தி கொள்ள நேரம் கிடைப்பதில்லை. இவை எல்லாம் மதிப்பெண்ணுக்காக தான் எனவே ஆரோக்கியமான சூழலில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் சூழலை பள்ளிகள் ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு கர்நாடகா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!