TN TRB 1,060 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்பு!

0
TN TRB 1,060 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு - விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்பு!
TN TRB 1,060 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு - விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்பு!
TN TRB 1,060 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான போட்டி தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விரிவுரையாளர் தேர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . அதனால் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. இதனை ஆராய்ந்து அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நடத்த திட்டமிட்டு வருகிறது.பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலிபணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டிச.7ம் தேதி மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த தேர்வு ஏற்கனவே, 2017ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட 166 பேருக்கு தேர்வு எழுத ஆயுள் தடை விதிக்கப்பட்டது. இந்தாண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் காலிப்பாணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

இந்த நிலையில் வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல கல்லுாரி மற்றும் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் மின் வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு மையங்களாக கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. வரும் 8ம் தேதி தேர்வு நடத்தப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்பதை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தேர்வர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here