தமிழகத்தில் 10,371 ஆசிரியர் & பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 10,371 ஆசிரியர் & பேராசிரியர் காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10,371 ஆசிரியர் & பேராசிரியர் காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10,371 ஆசிரியர் & பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி , பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கால அட்டவணையை ஆசிரியர் தகுதி வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி வாரியம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதாவது, பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி , பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் என மொத்தமாக 0,371 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

மேலும், முதுகலை ஆசிரியர்களுக்கான 2407 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் போட்டித் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, SCERT விரிவுரையாளர் 155 பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு குறித்தான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதத்தில் தகுதித்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலியாக உள்ள 1874 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு குறித்தான அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், காலியாக உள்ள 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு குறித்தான அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 1358 கல்லூரி உதவி பேராசிரியர்கள், 493 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மற்றும் 97 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here