நாட்டில் புதிதாக 10,000 தபால் நிலையங்கள்? மத்திய அரசின் திட்டம்!

0
நாட்டில் புதிதாக 10,000 தபால் நிலையங்கள்? மத்திய அரசின் திட்டம்!
நாட்டில் புதிதாக 10,000 தபால் நிலையங்கள்? மத்திய அரசின் திட்டம்!
நாட்டில் புதிதாக 10,000 தபால் நிலையங்கள்? மத்திய அரசின் திட்டம்!

நாடு முழுவதும் மக்களின் வீட்டிற்கு சென்று நேரடி சேவைகளுக்காக 10,000 தபால் நிலையங்களை திறக்க அஞ்சல் துறை செயலாளர் அமன் ஷர்மா திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

தபால் நிலையங்கள் திறப்பு

இந்திய அஞ்சல் துறையானது அரசு சேவைகளை வீட்டு வாசலில் வழங்குவதற்கான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும், அதன் வரம்பை அதிகரிக்க இந்த ஆண்டு 10,000 தபால் நிலையங்களை சேர்ப்பதாகவும் அஞ்சல் துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். CII மாநாட்டில் அஞ்சல் துறை செயலாளர் அமன் ஷர்மா அவர்கள், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தபால் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக, 5,200 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

மேலும் இது குறித்து, “சமீபத்தில் குஜராத்தில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்து முடித்துள்ளோம். 2012ல் நாங்கள் தொடங்கிய தகவல் தொழில்நுட்ப திட்டத்தை முன்னெடுத்து செல்லும்படி அரசு கூறியுள்ளது. இதனால் தபால் மற்றும் பல்வேறு அரசு சேவைகள் விரைவில் வீட்டு வாசலில் வழங்கப்படும். மக்கள் தபால் நிலையங்களுக்கு வருவதை விட, தொழில்நுட்பத்தின் உதவியுடன், சேவைகள் அவர்களின் வீட்டு வாசலில் வழங்கப்படும்” என்று திரு சர்மா கூறினார். குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அரசாங்கம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாக்கியாவிற்காக கோபியுடன் சண்டை போடும் ஜெனி, கோவத்தில் செழியன் – புதிய திருப்பங்கள்!

கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறைகளை பயன்படுத்தும் மக்களின் வீட்டு வாசலில் ₹ 20,000 கோடிக்கும் அதிகமான தொகையை இந்திய அஞ்சல் வழங்கியுள்ளது. அரசாங்கம் எங்களுடைய வரம்பை மேலும் அதிகரிக்கவும், மேலும் தபால் நிலையங்களை திறக்கவும் கேட்டு கொள்கிறது. மேலும் 10,000 தபால் நிலையங்களைத் திறக்க எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இவை தொலைதூரப் பகுதிகளில் செங்கல் மற்றும் மோட்டார் கட்டமைப்புகளாக இருக்கும். வங்கி மற்றும் நிதி சேவைகள் இருக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. வசிக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்கு இந்த சேவை கிடைக்கும். மேலும், புதிய 10,000 தபால் நிலையங்கள் நடப்பு நிதியாண்டில் திறக்கப்படும் என்றும், இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த தபால் நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 1.7 லட்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here