தமிழக அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை? தமிழக அரசுக்கு கோரிக்கை!

0
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை? தமிழக அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை? தமிழக அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை? தமிழக அரசுக்கு கோரிக்கை!

தற்போது அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரூ. 1000 உதவி தொகை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக இந்தாண்டு முதலே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும், நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? TCS நடத்தும் தேசிய தகுதித்தேர்வு! முழு விவரங்கள் இதோ!

அதாவது, பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள். நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் படித்த மாணவிகள் அனைவருமே இந்த ரூ.1000 உதவித்தொகையை கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அரசு பள்ளிகளில் மட்டுமல்லாமல் அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் இலவசமாக கல்வி கற்று வருகின்றனர். எனவே, அரசு பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போல அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற பள்ளி மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!