ரேஷன் கடைகளில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய்? முதல்வர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
ரேஷன் கடைகளில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய்? முதல்வர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ரேஷன் கடைகளில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய்? முதல்வர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ரேஷன் கடைகளில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய்? முதல்வர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக வாக்குறுதி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கட்சி 156 இடங்களில் ஜெயித்து ஆட்சியினை பிடித்துள்ளது. கடந்த மே மாதம் முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். தேர்தலின் போது அவர் வாக்களித்திருந்த அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிறப்பு சான்றிதழில் தாயின் பெயரை சேர்ப்பது குறித்து மத்திய அரசு விளக்கம்!

முதல் தவணை மே மாதத்திலும், அடுத்த தவணை ஜூன் மாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது. இத்துடன் ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் கொண்ட ஒரு தொகுப்பும் வழங்கப்பட்டது. அதே போல் இத்துடன் தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் திட்டத்தினையும் அதிரடியாக செயல்படுத்தினார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

TN Job “FB  Group” Join Now

இதற்காக பலரும் புதிய ரேஷன் அட்டைகள் வேண்டும் என்று மக்கள் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், இன்று மக்கள் எதிர்பார்த்து வரும் இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் சென்று விட்டு தலைமை செயலகத்திற்கு செல்லுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!