தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – இந்த ரேஷன் கார்டுகளுக்கு மறுப்பு?

1
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி - இந்த ரேஷன் கார்டுகளுக்கு மறுப்பு?
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி - இந்த ரேஷன் கார்டுகளுக்கு மறுப்பு?
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – இந்த ரேஷன் கார்டுகளுக்கு மறுப்பு?

தமிழக அரசின் அறிவிப்பின் படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நிதியுதவி திட்டம் தனிநபர் ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்காது என கூறப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கான விளக்கத்தை அரசு கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி திட்டம்

தமிழகத்தில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. முதலாவதாக கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சரி செய்யும் நோக்கத்தில் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு சில காலம் தாமதம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் செப்.19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இதற்கிடையில் ரேஷன் அட்டைதாரர்களாக பெண்கள் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் மாதந்தோறும் நிதியுதவி கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து பலரும் புதிய ரேஷன் கார்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். அதே போல கடந்த சில வாரங்களாக புதிய ரேஷன் கார்டுகளை கேட்டு வரும் விண்ணப்பமும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக அரசு தரும் நிதியுதவிகள், இலவச பொருட்கள் ரேஷன் அட்டைகள் அடிப்படையில் கொடுக்கப்படுவதால் புதிய விண்ணப்பங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட இருக்கும் ரூ.1,000 நிதியுதவியானது தகுதியுடையவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என அரசு விளக்கம் கொடுத்தது. இந்நிலையில் தனிநபர் ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதாவது தனிநபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவில்லை என அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதலே தனிநபர் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கொடுக்கப்படுவதில்லை என தெரிகிறது.

‘மீண்டும் லாட்டரி விற்பனை’ – மாநில முதல்வர் அனுமதி!

இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே தனிநபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு தரும் ரூ.1,000 நிதியுதவி கிடைக்காது என்றதொரு தகவல்களும் வெளியாகியுள்ளது. அதாவது, தனிநபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களே கொடுக்கப்படாத சூழலில், நிதியுதவி கிடைக்குமா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதற்கான விளக்கத்தை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ரேசன் கடைகளில் கடைக்காரர் நியாயமாக நடப்பது இல்லை கார்டை பொருட்கள் வழங்விட்டதக கூறி பொருட்கள் மொத்தமாக வெளியே விற்பனை ஆகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here