தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட், விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – முதல்வர் உறுதி!

0
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட், விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை - முதல்வர் உறுதி!
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட், விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை - முதல்வர் உறுதி!
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட், விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – முதல்வர் உறுதி!

தமிழகத்தில் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வரும் நிலையில், நேற்று தமிழக முதலவர் முக ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் காணொளி மூலம் பிரச்சாரம் செய்தார்.

முதல்வரின் பிரச்சாரம்:

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளாட்சி தேர்தலானது நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பில் உள்ள அரசு தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தொடங்கிய நிலையில், வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற பரப்புரை கூட்டத்தில் தமிழக முதலவர் முக ஸ்டாலின் காணொளி மூலமாக பிரச்சாரம் செய்துள்ளார்.

1 முதல் 10ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறப்பு – 144 தடை உத்தரவு அமல்!

முதல்வரின் உரையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,825 பதவிகளிலும் திமுக வேட்பாளர்களும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகின்ற நல்ல பல திட்டங்கள் மக்களை முழுமையாக சென்று சேர உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம்முடைய கையில் இருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் மலையளவு ஊழல்கள் செய்யப்பட்டு, அவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம், அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75 விழுக்காடு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி- நிதிநிலை அறிக்கை- 110 விதிகள் என்று மொத்தம் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

தமிழ்கத்தில் கடந்த மாதங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்குமான தொகை முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பத்தாண்டுகளாக சீரழிக்கப்பட்ட தமிழ்நாட்டை சீரமைத்தாக வேண்டும். தமிழகத்தின் நிதி நிலையை மோசமான நிலைக்கு தள்ளி அரசின் மொத்த கஜானாவையும் காலி செய்து விட்டார்கள். இந்த நிலையை மாற்றி விரைவில் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும். யாரையும் நாங்கள் ஏமாற்றப் போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!