தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கல்? முதல்வரிடம் கேள்வி!!
தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றாம் சாட்டியுள்ளார்.
இல்லத்தரசிகளுக்கு நிவாரணம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் திமுக கட்சி சார்பில் மக்களுக்கான பல நலத்திட்டங்கள் அடங்கிய வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் 5 முக்கிய நலத்திட்டங்களை அமல்படுத்தினார். குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்.
இந்தியாவிலேயே அதிவேக 4ஜி இன்டர்நெட் தரவரிசை – ஜியோ முதலிடம்!
கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு அவை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனால் பலர் இந்த நலத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
இது குறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்த நிவாரண தொகை குறித்தும், கட்டாயம் மதுவிலக்கு என பிரச்சாரம் செய்யப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விரைவில் அரசாணை வெளியிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.