தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – பிப்.28 கடைசி நாள்!

0
தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - பிப்.28 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - பிப்.28 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – பிப்.28 கடைசி நாள்!

தமிழகத்தில் படித்து முடித்த வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் வரும் பிப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு பெரும்பாலானோர் வேலைவாய்ப்பில்லாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையானது 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்துள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய உதவித்தொகையை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும், மற்றவர்களுக்கு குறைந்தது 5 வருடமும் முடிவடைந்திருக்க வேண்டும்.

TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு!

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் எவ்வித அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிய கூடாது. வயது வரம்பு SC, ST பிரிவினருக்கு 45, இதர பிரிவினருக்கு 40 வயதும், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

அதே போல் மாற்றுத் திறனாளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாதவர்களுக்கு ரூ.600, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய உதவித்தொகை பெறும் அறிவிப்பானது தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை இணைத்து வரும் பிப்.28ம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!