தமிழகத்தில் எந்தெந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – தெளிவுபடுத்த கோரிக்கை!
எந்த வகையான ரேஷன் அட்டைகளுக்கு தமிழக அரசு 1000 ரூபாயை வழங்கும் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு இதனை எப்போது தெளிவுபடுத்தும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
ரேஷன் அட்டைகள்:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சியினை பிடித்தது. தேர்தல் அறிக்கையின் போது முக ஸ்டாலின் அவர்கள் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அதில் ஒன்று தான் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது. ஆட்சி அமைத்ததும் முக ஸ்டாலின் அவர்கள் பல அறிவிப்புகளுக்கு உடனடியாக கையெழுத்திட்டார். ஆனால் 1000 ரூபாய் வழங்கும் இந்த திட்டம் குறித்து இன்று வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை வெளியீடு!
இது குறித்த விவரம் எப்போது வெளியிடப்படும் என்று மக்கள் அனைவரும் காத்து இருக்கின்றனர். தமிழகத்தில் 5 வெவ்வேறு விதமான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும் மக்கள் பலர் தங்களது ரேஷன் அட்டைகளை புதிதாக மாற்றினர். அதே போல் இந்த அறிவிப்பு குறித்து பல வித வதந்திகள் எழுந்த வண்ணமும் இருந்தது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை!!
ஆனால், இது குறித்து தமிழக அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழகத்தில் இருக்கும் அனைத்து மகளிர்க்கும் ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், அரசு 1000 ரூபாய் பெற இருப்பவர்களின் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல திட்டங்களை வகுத்து வருவதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.