18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 – முதல்வரின் சூப்பர் திட்டம்!

0
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 - முதல்வரின் சூப்பர் திட்டம்!
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 - முதல்வரின் சூப்பர் திட்டம்!
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 – முதல்வரின் சூப்பர் திட்டம்!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

பெண்களுக்கு ரூ.1000:

இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா போன்ற மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி சார்பில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் தலா ரூ. 1,000 வழங்குவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்குவது வழக்கமான ஒன்று. தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. தற்போது தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள ஆட்சியமைத்துள்ள தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அவற்றுள் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் திட்டம் துவக்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய இந்த திட்டமும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே பெண்களுக்கு மிகப் பெரிய அதிகாரமளிக்கும் திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என கூறிய கெஜ்ரிவால் ஒரு குடும்பத்தில் 3 பெண்கள் இருந்தால் அனைவருக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அனைத்து கட்சி சார்பிலும் தேர்தல் வாக்குறுதிகள் தாராளமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here