ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – தவறாமல் படிங்க!

0
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு - தவறாமல் படிங்க!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு - தவறாமல் படிங்க!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – தவறாமல் படிங்க!

பான் – ஆதார் கார்டை இதுவரை இணைக்கத்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பான் – ஆதாரை இணைக்கவில்லை என்றால் ரூ.500 அபராதம் செலுத்தி உடனே அந்த வேலையை முடிக்கவும். ஜூன் 30 ஆம் தேதிக்குள் இதை செய்து முடித்தால் ரூ.1000 என்கிற அபராதத்தில் இருந்து தப்பித்து குறைந்தது ரூ.500 ஐ சேமிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

முழு விவரம்:

இந்தியாவில் முக்கிய ஆவணமான ஆதார் அட்டையை தொடர்ந்து பான் அட்டை அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. பான் கார்டு அனைத்து வரி மேலாண்மை நோக்கங்களுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். பான் இல்லாமல், எந்த நிதி பரிவர்த்தனையையும் செய்ய முடியாது. இந்த 10 இலக்க எண்ணெழுத்து மற்றும் தனித்துவமான கணக்கு எண்ணை வரி செலுத்தும் நபர், நிறுவனம் அல்லது HUF க்கு ஒதுக்குவது இந்திய வருமான வரித் துறையாகும். மேலும் இந்த பான் கார்டை வைத்து பல பண மோசடிகள் நடந்து வருகிறது. அதை தடுப்பதற்கு மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்தது, அதாவது பான் அட்டையை ஆதார் அட்டையுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பது ஆகும்.

Post Office இல் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் – அருமையான சேமிப்பு திட்டம்!

கொரோனாவின் காரணமாக இந்த இணைப்புக்கு பல கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டன. இறுதியாக சிபிடிடி, பான் – ஆதாரை இணைக்கும் காலக்கெடுவை மார்ச் 31, 2022 வரை நீடித்தது. பான் மற்றும் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி, மார்ச் 31 உடன் முடிந்து விட்டதால், இணைப்பை செய்யாதவர்கள், சில விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடனே பான் நம்பர் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில், பான் எண்களை இணைக்காதவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31, 2023 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதை செய்ய ரூ.1,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் 30, 2022 க்குள் பான் – ஆதாரை இணைக்காதவர்கள் அதை செய்ய ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்குள்ளும் பான் – ஆதார் நம்பர்களை இணைக்க தவறினால், அடுத்த காலக்கெடு வரும் வரை ரூ.1,000 அபராதம் செலுத்தி பான் – ஆதாரை இணைக்கலாம்.மேலும் மார்ச் 31, 2023 க்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அதற்கு பின் எந்த அபராதமும் இருக்காது. குறிப்பிட்ட நபர்களின் பான் எண் செயலிழந்து போகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here