தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் திமுக அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கான மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

உரிமைத் தொகை:

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து கட்சிகளின் சார்பிலும் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. திமுக தேர்தலுக்கு முன்னதாக பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா உதவித்தொகை ரூ.4,000, அரசு பேருந்துகளில் மகளிற்கு இலவச பயணம், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. ஆட்சிக்கு வந்த பின்னர் சில முக்கிய திட்டங்களை அமலுக்கும் கொண்டு வந்தது.

பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு முக்கிய அறிவிப்பு – AICTE எச்சரிக்கை!

ஆனால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்புகள் ஏதும் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனையை முதன் முதலில் கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி தான்.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் இந்த திட்டத்தை தொடங்குவது தொடர்பாக ஆளுநர் உரையில் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சமூக நலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் தான் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள இந்த திட்டத்தை உடனடியாக தொடங்குவதற்கான அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here