தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

0
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தமிழகத்தில் திமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளின் போது திமுக கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு சில திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண கட்டணம், கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஜூலை 12க்கு மேல் கூடுதல் தளர்வுகள்? பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!

ஆனால் அதில் ஒன்றான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை, காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையை காக்க வேண்டும், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் திமுக வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இல்லையென்றால் அனைத்து பெண்கள் ஆதரவுடன் மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் முதியோர் உதவிதொகை ரூ.1000 இருந்து ரூ.1500 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, மேலும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்வி கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!