தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ள 1000 புதிய பேருந்துகள் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் சாமானிய மக்கள் பொதுவாக பேருந்து போக்குவரத்தில் அதிகம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய பேருந்துகள்
தமிழகத்தில் பெரும்பாலானோர் பொது போக்குவரத்துகளில் ஒன்றான பேருந்து போக்குவரத்தில் அதிகம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகம் முழுவதும் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு ஒரு பேருந்துக்கு ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து மொத்தமாக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பாதுகாப்பான பண பரிவர்த்தனை.. OTP நடைமுறை மாற்றம்!
Exams Daily Mobile App Download
மேலும் மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மட்டுமின்றி இதர கோட்டங்களுக்கும் புதிய பேருந்துகள் வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகளும் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.