தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

0
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமை ஆகிய பிரிவுகளில் ஆண்கள் தலைவராக உள்ள ரேஷன் கார்டுகளில் பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

குடும்பத் தலைவிகள்:

மத்திய அரசு மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள பயனர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர். கொரோனா கால கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தனி தனி குடும்ப ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பணம் வழங்கியது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கார்டுகளை பிரிக்கும்போது வசதி உள்ள பலருக்கு முன்னுரிமை கார்டும், ஏழை மக்களுக்கு முன்னுரிமையற்ற கார்டு வழங்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இரு பிரிவு கார்டுதாரர்களுக்கும் ஒரே மாதிரியாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. மேலும், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ரேஷன் கார்டுகளில் பல புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

இருப்பினும், திமுக தேர்தல் பிரச்சாரத்தில் குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில் அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமை ஆகிய ரேஷன் கார்டுகளில் பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற உணவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்த இரு பிரிவு ரேஷன் கார்டுகளில் ஆண்கள் குடும்பத் தலைவராக இருந்தால், பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற, சம்பந்தப்பட்டவரின் புகைப்படம், ரேஷன் கார்டு நகல், மனுவில் ரூ.5 கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று மாற்ற வேண்டும் என வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here