தமிழகத்தின் மரைன் காவல்படையில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!

1
தமிழகத்தின் மரைன் காவல்படையில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தின் மரைன் காவல்படையில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தின் மரைன் காவல்படையில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 42 மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்ற 1000 மரைன் ஊர்காவல் படை இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பதவிக்கு மீனவர் சமுதாய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மரைன் ஹோம் கார்டு:

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் தக்கலை அடுத்து துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதால் அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. தற்போது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அக்.23ம் தேதி வரை 21 கிராமங்களில் பொது ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

அதன்படி தற்போது கடலோர மாவட்டங்களில் உள்ள 42 மரைன் காவல் நிலையத்தில் மரைன் ஹோம் கார்டு பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் காவலர்களுக்கு உதவ உள்ளூர் காவல் நிலையத்தில் ஊர்காவல் படை என்ற அமைப்பு செயல்படுவது போல் கடலோர கண்காணிப்பு பணிக்காக மரைன் ஹோம் கார்டு பணிக்கு 1000 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்தார்.

தமிழகத்தில் புதன்கிழமை (அக்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அந்தந்த மாவட்டங்களில் காவல்துறை எல்லைக்குட்பட்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மீனவ இளைஞர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். தகுதியான மீனவ இளைஞர்கள் கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றாலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்படுவது போல் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here