தமிழகத்தில் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்தா? அமைச்சர் விளக்கம்!

0

தமிழகத்தில் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருக்கிறார்.

100 யூனிட் மானியம் ரத்து:

கடந்த 2016 ஆண்டு முதல் தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த திட்டம் மூலமாக லட்சக்கணக்கில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் தற்போது 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழக ரேஷன் கடைதாரர்களுக்கு ஓய்வூதியம்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைத்தாலும் இலவச மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் பெறவே ஆதார் இணைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர் எல்லா இடங்களிலும் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!