இரவு ஊரடங்கு ரத்து, 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

0
இரவு ஊரடங்கு ரத்து, 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
இரவு ஊரடங்கு ரத்து, 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
இரவு ஊரடங்கு ரத்து, 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

திரிபுரா மாநிலத்தில் திங்கள்கிழமை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும், பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 10 வரையிலும் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

திரிபுரா மாநிலத்தில் திங்கட்கிழமையான நேற்றைய நிலவரப்படி 79 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாளின் எண்ணிக்கை 138 ஆக இருந்தது. நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா சோதனை நேர்மறை விகிதம் 3.53 சதவீதமாக குறைந்துள்ளது. திரிபுராவில் 15-18 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள 2.13 லட்சம் பேரில் 1,12,574 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

IPL அப்டேட்: பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க திட்டமிடும் 14 வீரர்கள் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த வயதினருக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 734 பள்ளிகளில் ஜனவரி 19-21 முதல் குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி இயக்கத்தை அரசு மேற்கொண்டது. ஜனவரி 27 வரை புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் துறை அறிக்கையின்படி திரிபுராவில் உள்ள அனைத்து வயதினருக்கும் 49,41,939 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது. இதில் 39,558 பூஸ்டர் டோஸ்களும் அடங்கும். மாநிலத்தில் தற்போது 6,94,640 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கோவிட் -19 நோய் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செவ்வாய்க்கிழமையான நேற்று திரிபுரா அரசு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியுள்ளது. திங்கள் கிழமை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும், பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 10 வரையிலும் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். முன்னதாக, இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மீண்டும் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

அரசு அலுவலகங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட இந்த உத்தரவு அனுமதிக்கிறது. பணியிடங்களை முறையாக சுத்தம் செய்வதும், அடிக்கடி சுத்தப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடுமையான கோவிட் வழிமுறைகளை பின்பற்றி திருமண மண்டபங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!