Byju’s, Goldman Sachs நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்புகள் – புதிய அறிவிப்பு!

0
Byju’s, Goldman Sachs நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்புகள் - புதிய அறிவிப்பு!
Byju’s, Goldman Sachs நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்புகள் - புதிய அறிவிப்பு!
Byju’s, Goldman Sachs நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்புகள் – புதிய அறிவிப்பு!

இந்தியாவில் IT அல்லாத சில துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் 100% க்கும் அதிகமான புதியவர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விரிவான விளக்கங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

தற்போதுள்ள தொழில்முறை உலகம் டிஜிட்டல் சேவைகளை முழுமையாக நம்பியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் இந்திய சந்தையில் பல்வேறு துறைகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக IT மற்றும் IT துறை அல்லாத நிறுவனங்களான Tier-I மற்றும் Tier-II இரண்டும் தங்கள் பணியமர்த்தல் கணிசமாக எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதனுடன் IT மற்றும் BFSI நிறுவனங்களும், பொறியியல் கல்லூரிகளில் இருந்து வரும் புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து வருகிறது.

தமிழக அரசு மதுபான கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – புதிய உத்தரவு!

அதாவது கோல்ட்மேன் சாக்ஸ், PwC, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), பைஜூஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற இந்திய சந்தையில் உள்ள பெரிய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான புதியவர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஈடுபாடு காட்டி வருகிறது. இப்படி நாடு முழுவதும் புதிய பணியமர்த்தல் அதிகரிக்கும் போது, திறமைகளுக்கான மிகப்பெரிய தேவை எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னணி IT சேவை நிறுவனமான காக்னிசன்ட் 2022 ஆம் ஆண்டில் 45,000 புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளது.

இது இந்த 2021 ஆண்டில் வழங்கப்பட்ட 30,000 புதிய வேலைவாய்ப்புகளில் இருந்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனுடன் பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், சுமார் 600 பொறியியல் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறது. தொடர்ந்து ஆலோசனை நிறுவனமான PwC இந்த ஆண்டு அதன் பணியமர்த்தல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது. பெங்களூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் 2022 இல் சுமார் 24,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

முன்னமே அறிவித்தபடி, 2021-2022 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான TCS, இன்போசிஸ், HCL டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை இணைந்து 1,20,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த இருக்கிறது. இந்த நிறுவனங்களில் முழு ஸ்டேக் பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், AL அல்லது ML டெவலப்பர்கள், இணைய பாதுகாப்பு நிபுணர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய பிரிவுகளில் புதிய பணியமர்த்தல் ஏற்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.10 இல் எம்பில், பிஎச்டி நுழைவுத்தோ்வு – காமராஜர் பல்கலை அறிவிப்பு!

இந்த புதிய வேலைவாய்ப்புகள், IT துறையை தொடர்ந்து வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு தொழில்களில் 33% உருவாக்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து நிதி மற்றும் கணக்கு வேலைகள் தொடர்பான பிரிவுகளில் 11% வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட இருக்கிறது. பாரம்பரிய சந்தை நிறுவனங்களான ஆடை உற்பத்தி, ஜவுளி, தோல் மற்றும் நகைகள் போன்ற தொழில்களும் 24% பணியமர்த்தலை ஏற்படுத்தவுள்ளன. அதே நேரத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புகளில் 17% வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!