தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து – அமைச்சர் உறுதி!

1
தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து - அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து - அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து – அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நீட் தேர்வு:

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை பலரும் எதிர்த்து வரும் நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் உறுதி செய்து வருகின்றனர். இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!!

அவர் கூறியதாவது, ‘தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. காணொளி காட்சி வாயிலாக தமிழகத்தின் 9 மாவட்ட மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதலாக, மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட சுவாச பயிற்சி, மூச்சு பயிற்சி மற்றும் யோகா ஆகியவை கற்றுத் தரப்படுகிறது”

TN Job “FB  Group” Join Now

“அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்ய அனைவருக்கும் வலியுறுத்த வேண்டும். சிசேரியன் செய்வதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனை தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து செய்யப்படுவது உறுதி. நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பபட்டு ஒப்புதலோடு தான் திரும்பும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Neet exam ரத்து என்று அறிக்கை விட்டீர்
    மீன்டும் exam வைத்தால் பாதிக்கபடுவது மாணவச்செலவங்கள்

    கவன த்தில் கொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!