100 நாள் வேலைத்திட்ட நாட்களை அதிகரிக்க திட்டம் இல்லை – மத்திய இணையமைச்சர் பதில்!

0
100 நாள் வேலைத்திட்ட நாட்களை அதிகரிக்க திட்டம் இல்லை - மத்திய இணையமைச்சர் பதில்!
100 நாள் வேலைத்திட்ட நாட்களை அதிகரிக்க திட்டம் இல்லை - மத்திய இணையமைச்சர் பதில்!
100 நாள் வேலைத்திட்ட நாட்களை அதிகரிக்க திட்டம் இல்லை – மத்திய இணையமைச்சர் பதில்!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்ட நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை என மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம்:

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு வருடத்தில் 100 நாட்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தகுந்த ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாட்களுக்கு மேல் மாநில அரசு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கி தனது சொந்த நிதியில் இருந்து சம்பளம் வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் கிராமப்புற மக்களுக்கு வேலை அளிக்கப்பட்டது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் நலன் கருதி அவர்கள் பணிக்கு வர வேண்டாம் என மாநில அரசுகள் அறிவுறுத்தியது.

இந்திய வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் – இன்று SL vs IND 2வது T20 போட்டி!

இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டநாட்களை அதிகரிப்பது குறித்து, மற்ற பணிகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். இந்த 100 நாள் வேலை திட்டத்தின் பழங்குடியினர்களுக்கு என்று தனி கணக்குகள் பராமரிக்கப்பட்டு செலவினங்கள் தொகுக்கப்படும் என்றும் நடப்பு ஆண்டு முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது நடைமுறைப்படுத்தப்பட்டு மத்திய அரசால் பட்டியல் அனுப்பப்படும் என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பணி நாட்களை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த எம்பி வெங்கடேசன் பழங்குடி மக்களின் கூலிக்கணக்கை தனி பட்ஜெட் தலைப்பின் கீழ் வகைப்படுத்த வேண்டியதன் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பு திட்டங்கள் ஏதும் இடம் பெறாதது ஏன் என்றும் வினவியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here