இந்திய ஊழியர்களுக்கு 10.4 சதவீத ஊதிய உயர்வு எப்போது? தகவல் வெளியீடு!

0
இந்திய ஊழியர்களுக்கு 10.4 சதவீத ஊதிய உயர்வு எப்போது? தகவல் வெளியீடு!
இந்திய ஊழியர்களுக்கு 10.4 சதவீத ஊதிய உயர்வு எப்போது? தகவல் வெளியீடு!
இந்திய ஊழியர்களுக்கு 10.4 சதவீத ஊதிய உயர்வு எப்போது? தகவல் வெளியீடு!

இந்தியாவில் வரும் 2023 ம் நிதியாண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 10.4% ஊதியம் உயர்வு கிடைக்கும் என்று ஆய்வறிக்கை தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த தகவல் அனைத்து துறை ஊழியர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் கடந்த 2020, 2021ம் நிதியாண்டில் வேலை வாய்ப்பு என்பது பெறும் கேள்வி குறியாக இருந்து வந்தது. அப்போது நிலவிய கொரோனா பேரிடர் வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. அதனால் அப்பிரிவில் உள்ள ஊழியர்கள் வேலையிழப்பு மற்றும் சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகினர். அதனை தொடர்ந்து தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு பொருளாதார சரிவை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலுக்கு மத்தியில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது தான் நாடு இயல்பு நிலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் 28-வது ஆண்டு வருமான உயர்வு குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2023ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு 10.4% ஊதிய உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இ – வணிக துறையானது வரும் 2023ம் நிதியாண்டில் 12.8% ஊதிய உயர்வுடன் முன்னணியில் இருக்கும். அதே போல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊதிய உயர்வில் 12.7% இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

Exams Daily Mobile App Download

வாட்ஸ்அப் கேமராவில் புதிய அம்சம் – அட இது புதுசா இருக்கே!

அதனை தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு 11.3% சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் நிதி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு 10.7% சம்பள உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது இந்த ஆய்வு இந்தியா முழுவதும் சுமார் 40 க்கும் மேற்பட்ட தொழில் துறைகளை சேர்ந்த 1,300 நிறுவனங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக வளர்ச்சியை நோக்கி செல்வதால் சம்பள உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!