தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி மையம் தொடங்கப்படவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஓலா வாகன உற்பத்தி மையம்:

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பல தரப்பு மக்கள் தங்கள் பணியை இழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் செய்யாறு, திண்டிவனம் ஆகிய இடங்களில் பெரிய தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மருத்துவ காப்பீடு நீட்டிப்பு!

இந்நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் நேற்று (ஜூலை 1) சென்னை தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்த மையத்தில் இரு சக்கர வாகனத்துக்கு தேவைப்படும் அனைத்து உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஓலா நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே தமிழக முதல்வரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அவர்கள் கடலூரில் எச்.பி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆளை அமைக்கப்படவுள்ளது என்றும் இதுபோல் தமிழகத்திற்கு பல முன்னணி மற்றும் சர்வதேச தொழிற்சாலைகள் வரவுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here