காலி மதுபாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் வெகுமதி – மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு!

0
காலி மதுபாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் வெகுமதி - மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு!
காலி மதுபாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் வெகுமதி - மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு!
காலி மதுபாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் வெகுமதி – மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்பக் கொடுத்தால் பத்து ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் வனவிலங்குகள் மற்றும் சுற்றுப்புறமும் மாசுபாடு மற்றும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபாட்டில்கள் கொடுத்தால் ரூ.10:

நீலகிரி மாவட்டத்தில் மதுப்பிரியர்கள், மதுபானங்களை வாங்கி பயன்படுத்தி விட்டு காலி மதுபாட்டில்களை சாலையோரம், விளைநிலங்கள், வனப்பகுதிகளில் வீசி எறிகின்றனர். இந்த செயலை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். உடைந்த கண்ணாடி சிதறல்களால் யானை உட்பட பிற வன விலங்குகளுக்கு தீங்கு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரியில் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மே 20ம் தேதி கடைசி நாள்!

அனைத்து மதுபான பாட்டில்களின் மீதும் 10 ரூபாய், ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி உட்கொண்டவர்கள், ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கொடுத்து, 10 ரூபாயை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான பாட்டில்கள் மீது டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் மது அருந்துவோர் காலி மது பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடையில் கொடுத்து சுற்றுச்சூழலை காக்க ஒத்துழைப்பு தர வேண்டும்

Exams Daily Mobile App Download

அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில், சாலையோரங்கள், வனப்பகுதி, விளைநிலங்கள், மக்கள் கூடும் இடங்களில் காலி மது பாட்டில்களை சேகரித்து அகற்றும் பணி, கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. அதன்படி 5,000 கிலோ அளவுக்கு காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையங்களில் ஒப்படைத்தோ அல்லது டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here