கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் & அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் தகவல்!

0
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் & அகவிலைப்படி உயர்வு - அமைச்சர் தகவல்!
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் & அகவிலைப்படி உயர்வு - அமைச்சர் தகவல்!
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் & அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு:

தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடந்து வருகின்றது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியான விவாதம் நடந்து வருகின்றது. இன்று துணிநூல் துறை அமைச்சர் தனது துறைக்கான புதிய திட்டங்கள் பலவற்றை அறிவித்துள்ளார்.

SBI வங்கியின் டெபிட் கார்டு மூலம் EMI ஷாப்பிங் சேவை – முழு விவரம் இதோ!

அமைச்சர் ஆர்.காந்தி கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்துள்ளார். கைத்திறன் தொடர்பாக மாமல்லபுரத்தில் உள்ள கைவினை கலைஞர்களின் குடியிருப்புகள், உற்பத்தி கூடம் போன்றவற்றை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளை அதிகரிக்கவும் கைவினை கலைஞர்களின் வாழ்வு மேம்படவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். பின்னர், கைத்தறி நெசவாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 10 % உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளிகளுக்கு 5000 ஆசிரியர்கள் நியமனம் – முதல்வர் அறிவிப்பு!

ரூ. 20 லட்சம் செலவில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் கதர், பாலிஸ்திரா ரகங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் வெளியிடப்படும். திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ரூ. 6 கோடியில் சாயக் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பில் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் குறித்த கைத்தறி அருங்காட்சியம் அமைக்கப்படும். 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும் மற்றும், கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!