தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் - முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் - முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் லாபம் எட்டாத நிறுவனங்கள் என்று பிரிக்கப்பட்டு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வந்த காரணத்தால் அதிகபட்சமாக 10% போனஸ் அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

நடப்பாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், 2020 – 2021 ம் ஆண்டு அரசு பணியாளர்களுக்கான தீபாவளி போனஸ் பற்றிய தமிழக அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2012-ன் படி போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21000 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், போனஸ் கணக்கிட இருந்த மாதந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய கணக்கீடுகளின் படி 2020 – 2021ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணை தொகை பின்வருமாறு வழங்கப்பட உள்ளது.

11ம் வகுப்பு தேர்வு அக்.27ம் தேதி தொடக்கம் – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

அனைத்து லாபம் ஈட்டியுள்ள மற்றும் நஷ்டம் அடைந்துள்ள அரசு பொதுதுறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலார்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணை தொகை என்று மொத்தம் 10% வழங்கப்படும். இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8400 பெறுவார்கள். மேலும், அறிக்கையில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,87,250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!