தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
போனஸ் அறிவிப்பு
தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில், அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போனஸ் திட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாரிடம் இருந்து பேருந்துகள் குத்தகைக்கு எடுக்க திட்டம் – மாநில அரசு முடிவு!
அது மட்டுமில்லாமல் தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400 கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனவும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.