தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு!

வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 75வது சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்வர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 3% உயர்த்தப்பட்டு 34% அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்று பல்வேறு சலுகைகளும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களுக்கு போனஸ் தொகை வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி தற்போது ஒவ்வொரு துறை ஊழியர்களுக்கும் போனஸ் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் – இந்திய வானிலை மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

இவர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணை தொகை என மொத்தமாக 10% போனஸ் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து தற்போது தமிழக கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, தமிழக கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் தொகையானது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!