செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 10 சொகுசு இலவச பஸ்கள் ஏற்பாடு – அமைச்சர் துவக்கி வைப்பு!

0
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 10 சொகுசு இலவச பஸ்கள் ஏற்பாடு - அமைச்சர் துவக்கி வைப்பு!
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 10 சொகுசு இலவச பஸ்கள் ஏற்பாடு - அமைச்சர் துவக்கி வைப்பு!
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 10 சொகுசு இலவச பஸ்கள் ஏற்பாடு – அமைச்சர் துவக்கி வைப்பு!

சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நாளை (ஜூலை 27) நடைபெற இருக்கும் நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். மேலும் பார்வையாளர்கள் வர வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

இந்தியாவில் முதன்முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். நாளை (ஜூலை 28) நடைபெறும் துவக்க விழாவிற்கு பிரதமர் உள்ளிட்ட பலர் வருகின்றனர். மேலும் இந்த போட்டியானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள சென்னையில் குவிந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ல் அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – இதற்காக தான்!

மேலும் இந்த போட்டியை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். சென்னையில் உள்ள பல ஹோட்டல்களில் அவர்கள் தங்கி இருக்கின்றனர். விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள அனைத்து ஓட்டல்களும், இவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வரும் சுற்றுலா பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்காக மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா நட்பு வாகனம் என்ற பெயரில் 25 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

இந்த ஆட்டோக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று தொடங்கி வைத்தார். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 10 சொகுசு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் இருந்து 5 பஸ்களும், அடையாறில் இருந்து 5 பஸ்களும் செல்ல இருக்கின்றன. இதில் பயணம் செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மேலும் விளையாட்டு வீரரகள் சென்று வர சுற்றுலா தலங்களில் அந்த பஸ் நிறுத்த வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here