ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் 10 கிலோ இலவச உணவு தானியங்கள்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாதம் 10 கிலோ இலவச உணவு தானியங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாதம் 10 கிலோ இலவச உணவு தானியங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் 10 கிலோ இலவச உணவு தானியங்கள்!

கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளின் விளைவினால் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. தற்போது அதில் கூடுதல் ஜாக்பாட் கிடைத்துள்ளது.

இலவச ரேஷன்:

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பினை குறைப்பதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், பிரதமரால் துவக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத்திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் பலனடையும் அனைத்துப் பயனாளிகளுக்கும் நபருக்கு ஐந்து கிலோ வீதம் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை முன்னுரிமையற்ற கார்டுதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதல் அரசி இலவசமாக வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு உச்ச நிலையை அடைந்த பொழுது அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதம் முதலில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களின் கோரிக்கை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட நிலையில், தற்போது 2022 மார்ச் வரை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் கோதுமை மற்றும் அரிசியை மாதம் இருமுறை இலவசமாகப் பெறுவார்கள். இதனுடன், பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Post Office தினசரி ரூ.70 முதலீட்டில் ரூ. 1.5 லட்சம் வழங்கும் சேமிப்புத் திட்டம் – முக்கிய விவரங்கள் இங்கே!

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னதாக மாநில அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ உணவு தானியங்களை வழங்கி வருகிறது. இதனால் உத்தரபிரதேசத்தில் 15 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இரட்டிப்பு ரேஷன் பலனை பெறுகிறார்கள். . இதனால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் இதுவரை 80 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இலவச ரேஷன் பொருட்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!