தமிழக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? காய்ச்சல் அபாய எதிரொலி!

0
தமிழக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? காய்ச்சல் அபாய எதிரொலி!
தமிழக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? காய்ச்சல் அபாய எதிரொலி!
தமிழக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? காய்ச்சல் அபாய எதிரொலி!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு என்று அடுத்து 10 விடுமுறை அளிக்கப்பட இருக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்த உண்மை நிலவரம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் மூடல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 வருடங்களாக பொது மக்கள் அனைவரையும் பெரிதும் பாதிப்படைய வைத்தது. அதில் அதிக சிரமத்திற்கு உள்ளானது, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் தான். ஆனால், இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததால் எப்போதும் போலவே பாடங்கள் எடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்திய மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு – அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக விஷ காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இந்த காய்ச்சலின் காரணமாக மாணவர்களுக்கு சளி, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை ஏற்பட்டு வருகிறது. இந்த பாதிப்பு இன்னும் தமிழகத்தில் பரவாமல் இருக்கிறது தான் என்றாலும் அனைத்து மாணவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிடவில்லை.

இந்த மழைக்காலத்தில் இது போன்ற காய்ச்சல் மற்றும் சளி ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே இருப்பது தான். இருந்தாலும், மாணவர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், இந்த நோய் பரவலின் காரணமாக தமிழக மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்யுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here