TNPSC கூட்டுறவுத் துறையில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC கூட்டுறவுத் துறையில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC கூட்டுறவுத் துறையில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC கூட்டுறவுத் துறையில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC,) கூட்டுறவுத் துறையில் காலியாக இருக்கும் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக TNPSC குரூப் தேர்வுகள் எதுவும் திட்டமிட்டபடி நடத்தப்படாத நிலையில் தேர்வுக்காக காத்திருந்த பல லட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் 2022ம் ஆண்டில் TNPSC தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்ட அரசாங்கம் அதற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு குரூப் 2, 2 A , குரூப் 4 உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட TNPSC தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

IPL 2022: சன்ரைசர்ஸ் அணியின் நியூ ஜெர்ஸி இன்று வெளியீடு – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இப்போது, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று TNPSC தலைவர் அறிவித்துள்ள நிலையில், பலரும் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூட்டுறவுத் துறையில் காலியாக இருக்கும் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை பதவிக்கான காலியிடங்கள், சம்பளம், வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்ப விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பதவி: உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை.

காலியிடங்கள் – 8

சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை.

வயது வரம்பு: 01.07.2022 தேதிக்குள் 30 வயது முடிவடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம்.

கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
  • அதே சமயம் SC, ST (A), ST, MBC (V), MBC – DNC, MBC, BC, BCM போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் மற்றும் விதவைகளுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 30.04.2022ம் தேதி காலை – தாள் 1 மற்றும் மதியம் – தாள் 2 என 2 தேர்வுகள் நடத்தப்படும்.

கடைசி நாள்: விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி நாள் 21.02.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!