TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

1
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனங்களான TCS, இன்போசிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்டவை வரும் நாட்களில் சுமார் 1 லட்சம் புதிய தொழிலாளர்களை பணியமர்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பணியமர்த்தல்:

கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வரும் சூழலில் பல விதமான சேவைகள் மீண்டுமாக புத்துயிர் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை புதிய பணியாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையில் விப்ரோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!

அதாவது இந்த நிதியாண்டில் TCS, இன்போசிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இம்மூன்று நிறுவனங்களின் காலாண்டு வருவாய் புதுப்பிப்பில் அவை தெரிவித்துள்ள தகவலின் கீழ் இந்த அறிவிப்பு உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, TCS நிறுவனம் 2021-22 ஆம் நிதியாண்டில் 40,000 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது.

ஏற்கனவே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டில் 40,000 பட்டதாரிகளை பணியமர்த்தியது. கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் 3.60 பேர் TCS நிறுவனம் நடத்திய நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, உலகளாவிய அளவில் 35,000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிறுவனத்தில் கடந்த மார்ச் மாத காலாண்டில் 2.59 லட்சமாக இருந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, ஜூன் மாத காலாண்டின் இறுதியில் 2.67 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விப்ரோ தகவல் தொழில்நுட்ப சேவைகளை பொறுத்தவரை, முதல் காலாண்டில் 2,09,890 என்ற மைல் கல்லை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் 22,000 புதியவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!