நடப்பு நிகழ்வுகள் – 01 நவம்பர் 2022!

0
நடப்பு நிகழ்வுகள் - 01 நவம்பர் 2022!
நடப்பு நிகழ்வுகள் - 01 நவம்பர் 2022!

தேசிய செய்திகள்

India Chem 2022

  • மத்திய சுகாதாரம் அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, நவம்பர் 2, 2022 அன்று புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் “விஷன் 2030: ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் இந்தியாவைக் கட்டமைக்கும்” என்ற கருப்பொருளுடன் INDIA CHEM 2022 ஐத் தொடங்கி வைக்கிறார்.
  • India Chem, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் தொழில்துறையின் மிகப்பெரிய கூட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புடன் (FICCI) இணைந்து INDIA CHEM 2022 இன் 12வது பதிப்பை ஏற்பாடு செய்துள்ளது. கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டுப் பகுதிகளில் (பிசிபிஐஆர்) முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தவும் இந்நிகழ்வு அமையும்.

 சர்வதேச செய்திகள்

சர்வதேச  பெட்ரோலிய கண்காட்சி

  • அபுதாபியில் உள்ள தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு அக்டோபர் 31, 2022-ம் தேதி  தொடங்குகிறது.
  • அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சியில் ​​இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள அரங்கை  இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திறந்து வைக்கிறார்.

இங்கிலாந்தில் முதல் பார்வையற்ற கருப்பின பெண் வழக்குரைஞர்

  • 23 வயதான ஜெஸிகா இன்பா லண்டனில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் படித்து, பிரிட்டனின் முதல் கருப்பின பெண் பார்வையற்ற வழக்குரைஞர் ஆனார்.
  • பிரெய்லி முறையைப் பயன்படுத்தி தனது முழுப் படிப்பையும் முடித்தார்,நீதிமன்றத்தில் அவர் ஒரு சிறிய மின்னணு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார், அதில் பிரெய்லி விசைப்பலகை ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு விசையும், எழுத்துகள் தோன்றும் சிறிய திரையும் இருக்கும்.

 மாநில செய்திகள்

ஹரியானாவில் மாவட்ட வாரியாக ஹெலிபேட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

  • ஹரியானா அரசாங்கம் அவசரநிலையைச் சமாளிக்க மாவட்ட வாரியாக ஹெலிபேட் வசதிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
  • கூடுதலாக, இந்த ஹெலிபேடுகள் இரவு நேரங்களிலும் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகளைக் கொண்டிருக்கின்றன இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிபேட் வசதிகளைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக ஹரியானா திகழும்.

முதல் EMC மகாராஷ்டிராவில் அமைக்கபடவுள்ளது

  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சகம் கிரீன்ஃபீல்ட் எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்ச்சரிங் கிளஸ்டருக்கு(greenfield electronic manufacturing cluster (EMC)) -க்கு ரூ. 492.85 கோடியில் மகாராஷ்டிராவில் புனேவுக்கு அருகில் உள்ள ரஞ்சன்கான் மூன்றாம் கட்டத்தில் அமைக்கப்பட ஒப்புதல் அளித்துள்ளது.
  • புனே, ரஞ்சன்காவ்னில் உள்ள EMC, எதிர்காலத்தில் ரூ.2000 கோடிமேல் முதலீடுகளை மற்றும் 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது, இந்தியாவில் ஏற்கனவே நொய்டா, திருப்பதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் EMC நிலையம் அமைந்துள்ளது.

குஜராத்தில் 8000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்

  • 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பனஸ்கந்தாவில் உள்ள தாராட்டில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  • பின்னர், அகமதாபாத்தில் உள்ள அசர்வாவில் 2900 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 நியமனங்கள்

பிரேசில் அதிபர் தேர்தலில்  இடதுசாரி தலைவர் லுலு டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்

  • பிரேசிலில் கடந்த 2022 அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது,பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ10 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபாராக வெற்றிபெற்றுள்ளார். புதிய அதிபராக தேர்வான லுலு டா சில்வா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார்.

 தொல்லியல் ஆய்வுகள்

1481-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

  • கிருஷ்ணகிரி மாவட்டம் குடிமேனஹள்ளி பகுதியில் 1481-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மேலும் இந்த கல்வெட்டு விஜய நகர பேரரசு காலத்து கல்வெட்டு என்றும் அதில் மல்லிகை அர்ஜுன் பிரதாப தேவராயர் அளித்த கொடையை குறித்து கூறப்பட்டுள்ளது.

 விருதுகள்

இந்தியாவில் மத்திய அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை விருது 2022

  • 2022 ஆம் ஆண்டிற்கான “மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை பதக்கம்” 4 சிறப்பான நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • 2018 -ம் ஆண்டில் இந்த பதக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை நடவடிக்கை, ஆயுதக் கட்டுப்பாடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்ற பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைக்காக வழங்கப்படுகிறது.
  • விருது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில், பொதுவாக 3 சிறப்புச் செயல்பாடுகள் விருதுக்காகக் கருதப்படுகின்றன.

ராஜ்யோத்சவா விருது 2022

  • ராஜ்யோத்சவா விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலம் உருவான நாளன்று கொண்டாடப்படுகிறது, இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
  • மேலும், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், எழுத்தாளர் மித்ரா உள்ளிட்ட 67 பேருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்பபடவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

 விளையாட்டு செய்திகள்

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022

  • ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கியது.
  • 16 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது  இதன் மூலம் கடந்த முறை ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை இரண்டு முறை ஸ்பெயின் அணி  வென்றுள்ளது.

 சர்வதேச ஜூனியர் ஹாக்கி போட்டி 2022

  • 6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்தது.
  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியின் மூலம் இந்தியா சாம்பியன் பட்டத்தை 2013, 2014 மற்றும் 2022- ஐ யும் சேர்த்து  3-வது முறையாக வென்றுள்ளது.

 சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி

  • பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது.
  • இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில், சாத்விக்- சிராக் ஜோடி, சீனாவை சேர்ந்த லு சிங் யாவ்-யாங் போ ஹான் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
  • இதன்மூலம், சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக்- சிராக் பெற்றனர். மேலும், சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாத்விக்- சிராக் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும்.

உலக ஜூனியர் பேட்மிண்டன் 2022

  • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி சீன தைபே சேர்ந்த குவ் குவான் லின்னிடம்  தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.
  • சென்னையைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி யை சேர்த்து உலக ஜூனியர் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற 10-வது இந்தியர் ஆவார்.

 முக்கிய தினம்

லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 2022

  • மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை மத்திய லஞ்சஒழிப்பு கமிஷன் லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கிறது.
  • இந்த ஆண்டு, “வளர்ந்த தேசத்திற்கான ஊழலற்ற இந்தியா” என்ற  கருப்பொருளுளை கொண்டு  2022 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!