இன்று முதல் மே 3 வரை 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
கோவா அரசு இன்று (ஏப்ரல் 29) முதல் மே 3 வரை நான்கு நாடுகளுக்கு முழு முடக்கத்தை அறிவித்துள்ளது. சுற்றுலா தலங்களில் அதிகளவு மக்கள் கூடுவதை தவிர்க்க இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழு முடக்கம்:
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து கோவாவில் இன்று (ஏப்ரல் 29) முதல் 4 நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவாவில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற போதிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு இன்று இரவு 7 மணி முதல் மே 3ஆம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த 4 நாட்கள் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளான மளிகை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும். தவிர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். மருத்துவம், மருந்து சார்ந்த சேவைகளுக்கு தடை இல்லை. இந்த 4 நாட்களும் சுற்றுலாவுக்காக வந்திருந்த பயணிகள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி – மத்திய அரசு திட்டம்!
பொது போக்குவரத்துக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது போல பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மத வழிபாட்டு தலங்களில் 50% மக்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோவாவில் தினமும் 16 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.