தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமூக நலன் மற்றும் உரிமை துறை மூலமாக ஏழை, எளிய பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இலவச தையல் இயந்திரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலரது பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அரசு தரப்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 ரொக்கம் மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அரசு வேலை கிடையாது – புதிய சட்டம்!

அதில், சமூக நலன் மற்றும் உரிமைத் துறை மூலமாக வழங்கப்படும் பெண்களுக்கான இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டில் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மின் மோட்டார் பொருத்தப்பட்டு வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த தையல் இயந்திரம் பெற தகுதியுடைய பெண்கள் இதற்கான விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, தையல் பயிற்சி சான்று, வயது சான்று, சாதி சான்று நகல், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் 2, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர், மாற்றுத்திறனாளி பெண் என்பதற்கான சான்று நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்கள் இணைக்க வேண்டும். அதனை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here